பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. னவே விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு பதிவு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.